Load Image
dinamalar telegram
Advertisement

கே.வி.ஆனந்த் குடும்பத்தினரை சந்தித்த சிவகுமார் - சூர்யா!

கே.வி.ஆனந்த் குடும்பத்தினரை  சந்தித்த சிவகுமார் - சூர்யா! Entertainment பொழுதுபோக்கு

காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன் என்ற படத்தில் இயக்குனரான அவர், சூர்யா நடிப்பில் அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கினார். இந்த மூன்றுமே சூர்யாவுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. காப்பானுக்கு பிறகு படங்கள் இயக்காத கே.வி.ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் கே.வி.ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.



வாசகர் கருத்து (3)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    ஒருவரின் அன்பை கேலி செய்ய கூடாது .நட்பு பெரியது .

  • M Ramachandran - Chennai,இந்தியா

    திருட்டு புத்தி கூட்டம்

  • LAX - Trichy,இந்தியா

    என்னங்க.. வைரலு.. காலரா னு.. 🙄

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement