
விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று அக்டோபர் 2ம் தேதி காலை இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் தயாரிப்பு தரப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்று அக்டோபர் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் பாடல் காட்சியுடன் இதன் படப்பிடிப்பை தொடங்கினர். இந்த பாடல் காட்சிக்காக ஏ.ஐ டெக்னாலஜி பயன்படுத்தி உருவாக்குவதாக கூறப்படுகிறது. இப்போது இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!