Load Image
dinamalar telegram
Advertisement

மாற்றுத்துணி இல்லாமல் லண்டனில் கணவருடன் சிரமப்பட்ட சிம்பு பட நாயகி

மாற்றுத்துணி இல்லாமல் லண்டனில் கணவருடன் சிரமப்பட்ட சிம்பு பட நாயகி Entertainment பொழுதுபோக்கு

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிம்புவின் ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். தொடர்ந்து பரத்துடன் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மட்டுமே நடித்த அவர் அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறவில்லை. இடையில் மீண்டும் சிம்புவுடனேயே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூரத்தை சேர்ந்த முப்தி அனாத் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை ஒன்றுக்கும் தாயானார் சனா கான்.

இந்த நிலையில் லண்டனுக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சனா கான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனில் சென்று இறங்கிய அவர் உட்பட நூற்றுக்கணக்கான பேருக்கு அவர்கள் கொண்டு சென்ற லக்கேஜ் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. விமான நிலையத்தில் பல மணிநேரம் தனது உடைமைகளை தேடி அவர் அலைக்கழிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஓட்டலில் தங்கி இருக்கும் சனா கான் இதுகுறித்து தொடர்ந்து வீடியோக்களையும் அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதில் லண்டன் வந்து இறங்கி இரண்டு நாட்கள் ஆகியும் தனது லக்கேஜ் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை என்றும், கடந்த இரண்டு நாட்களாக லக்கேஜ் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் மாற்றுத் துணி கூட இல்லாமல் ஒரே உடையை அணிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது குழந்தைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 5 உடை மற்றும் 10 டயபர் மாற்ற வேண்டிய சூழலில் இருப்பதால் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.



வாசகர் கருத்து (5)

  • AKM KV SENTHIL MUSCAT - muscat,ஓமன்

    திருச்சி ஏர்போர்ட்லேயும் லக்கேஜ் எப்போ வரும்னு காத்துதான் நிற்கவேண்டியுள்ளது

  • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

    நம்ப முடியவில்லை. பணமே இல்லாமல் லண்டனில் இறங்க முடியாது. அங்கு முதலில் எவ்வளவு பணம் வைத்து இருக்கிறீர்கள் என்று தான் விசா வழங்கும் அதிகாரி கேட்பார். சுற்றுப்பயணத்துக்கு காசு தேவை. இந்த மாதிரி கேட்டு ரசிகர்களிடம் பணம் வசூலிப்பது தான் நடிகர்களின் லட்சியமா?

    • Balaji - Chennai,இந்தியா

      அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம் அமெரிக்கரே.. அவர்கள் பணம் கேட்டு வசூல் செய்ததாக செய்தியில் இல்லையே..

  • Senthoora - Sydney,ஆஸ்திரேலியா

    ஏம்மா லண்டனுக்கு போகும்போது காசு இல்லாமலா சுற்றுப்பயணம் போனீங்க. மும்பாய் ஏர்போட்டில் எப்போதும் லகேஜ் எப்போதும் தாமதமாக வருவது சாதாரணம். நான் மும்பாய் ட்ரான்சிட் இப்போ தவிர்த்து வருகிறேன்.

    • Balaji - Chennai,இந்தியா

      அவர்கள் கையில் பணம் இல்லை என்று கூறவில்லை... கையில் பணம் இருக்கிறதென்பதற்காக ஒடனே கடைத்ததெருவிற்கு சென்று மேலும் உடைகள் வாங்க வேண்டுமா? அவர்கள் ஏற்கனவே பல உடைகள் வைத்திருப்பவராக இருக்கலாம் இல்லையா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement