Load Image
dinamalar telegram
Advertisement

சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கும் ஏஆர் ரஹ்மான்

சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கும் ஏஆர் ரஹ்மான் Entertainment பொழுதுபோக்கு

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்பட்ட ஏஆர் ரஹ்மானின் இமேஜை கடந்த வாரம் அவர் சென்னையில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.

பல்லாயிரம் பேர் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழையக் கூட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்தது என்றெல்லாம் கூட குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த வாரம் முழுவதும் டிவிக்களில் விவாதம் நடத்தும் வரை அந்த இசை நிகழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

கடும் விமர்சனங்கள் எழுந்த பின் ஏஆர் ரஹ்மான் அவரது டுவிட்டர் தளத்தில் டிக்கெட்டுகளின் காப்பியையும், அவர்கள் குறைகளையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதன்பின் ரஹ்மான் தரப்பிலிருந்து 4000 பேருக்குக் கட்டணத் தொகையைத் திருப்பி அனுப்புவதாக செய்திகள் வெளிவந்தன. பல சினிமா பிரபலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தோ, பணம் திருப்பித் தரப்படுவது குறித்தோ சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் ரஹ்மான் பதிவிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் தரும் ரஹ்மான் கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்து வருகிறார்.



வாசகர் கருத்து (2)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    இப்போது தான் அதிகமாக முக நூலில் அவரை பற்றிய விளம்பரம் அதிகமாக வர ஆரம்பித்தது .இப்ப பார்த்து விழாவில்அவர் சொதப்பி விட்டார் .மார்க்கெட் இல்லாததால் வந்த வினை ?

  • jagan - Chennai,இலங்கை

    பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். திருடனுக்கு தேள் கொட்டினால் போல் உள்ளது போலும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement