Load Image
dinamalar telegram
Advertisement

கடும் எதிர்ப்பால் அந்தர் பல்டி அடித்த பிரகாஷ் ராஜ்

கடும் எதிர்ப்பால் அந்தர் பல்டி அடித்த பிரகாஷ் ராஜ் Entertainment பொழுதுபோக்கு

பா.ஜ.க.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும் பேசி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறவர் பிரகாஷ் ராஜ். இது அவரது அரசியல். ஆனால் கட்சி, அரசியல் கடந்த இந்தியாவின் சரித்திர சாதனையை அரசியல் நிலைப்பாட்டிலிருந்து கேலி செய்தார் பிரகாஷ் ராஜ். சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்தார். அதில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, நிலவில் இருந்து வரும் முதல் புகைப்படம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த கார்ட்டூன் சந்திரயான் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் விதமாக உள்ளது. இந்தியர்கள் பெருமைப்படும் ஒரு விஷயத்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கிண்டல் செய்வது வெட்ககேடானது என்று கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கும். ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையினை கூறியிருந்தேன். கேரள டீக்கடைக்காரரை கொண்டாடியுள்ளேன். எந்த டீ விற்பவருக்கு இது கேலியாக தெரிகிறது? நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள் தான் நகைச்சுவையே. வளருங்கள் என பதிவிட்டிருந்தார். இது மேலும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் சந்திரயானை கேலி செய்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக பல இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டது, பல இடங்களில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் இந்த விஷயத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளார். தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் பெருமையான தருணம். நன்றி இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. இது நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் நமக்கு வழிகாட்டட்டும்” என பதிவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement