Load Image
dinamalar telegram
Advertisement

ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை

ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை Entertainment பொழுதுபோக்கு

தனது ஆறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க துவங்கிய கமல்ஹாசன், இப்போது வரை உச்ச நடிகராகவே இருந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கலைச்சேவை செய்து வரும் கமல்ஹாசன், திரை உலகில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளார். இதனால் நடிகர் கமலஹாசனுக்கு அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‛வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது கையால் கமல்ஹாசனுக்கு வழங்கினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாவருக்கும் முன்பு ஓடிடி வருகை குறித்து அறிந்தவன் நான். அப்போதே நான் எல்லோரிடமும் கூறினேன்; யாரும் என்னுடன் ஒத்துழைக்கவில்லை. தற்போது அனைவரும் புரிந்து கொண்டனர் நான் சொல்ல வந்ததை. நான் சினிமா காதலன். நான் பார்க்க விரும்பும் படங்களை தயாரிக்கிறேன். அதில் பணத்தை செலவிடுவதை தவிர்த்து எதுவும் செய்வதில்லை. நீங்கள் எம்.ஏ. இலக்கியத்தில் பட்டம் பெற்றாலும் திரைக்கதை எழுத முடியாது. இது வேறு வகையான கலை. ஷேக்ஸ்பியர் இன்று வந்து திரைக்கதை குறித்து பயிற்சி பட்டரை நடத்தலாம். அவர் ஒரு சிறந்த கலைஞன். கல்வி மிகக் குறைவாகதான் ஆரம்பித்திருக்கிறது. இயற்கையாகவே அப்படித்தான் நடக்கும். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. கிரிக்கெட் பயிற்சிக்கு நிறைய இடங்கள் உள்ளன. அதேமாதிரி சினிமாக்கு பொருந்துமென நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விஸ்வரூபம் திரைப்படம் வரும்பொது ஓடிடி குறித்து கமல் பேசியிருந்தார். ஆனால் அப்போது அதற்கு எதிர்ப்பு கிளம்பவே தனது முடிவை கமல்ஹாசன் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement