Load Image
dinamalar telegram
Advertisement

பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்!

பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! Entertainment பொழுதுபோக்கு

புதிய பார்லிமென்ட் கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம் மிகப்பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த புதிய பார்லி., கட்டடத்தின் அழகை விவரிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‛நம்முடைய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் மக்களுக்கு ஒரு அற்புதமான புதிய வீடு. இது இந்த மகத்தான தேசத்தில் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி பன்முகத்தன்மையை பாதுகாக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்றாலும் இந்தியாவின் மகிமை என்கிற பழைய கனவை சுமந்து கொண்டிருக்கிறது. ஜெய்ஹிந்த்' என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

ஷாருக்கானின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடம் ஜனநாயக வலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக அமைந்திருக்கிறது. இதில் நம்முடைய பாரம்பரியம் மட்டுமின்றி நவீனமும் கலந்து இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement