Load Image
dinamalar telegram
Advertisement

ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த அபூர்வ நடிகை “ஆச்சி” மனோரமா

ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த அபூர்வ நடிகை “ஆச்சி” மனோரமா Entertainment பொழுதுபோக்கு

1. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை நாயகி, “பொம்பள சிவாஜி” என கலையுலகினரால் பாராட்டுப் பெற்ற “ஆச்சி” மனோரமா அவர்களின் 84வது பிறந்த தினம் இன்று…

2. கோபிசாந்தா என்ற இயற்பெயர் கொண்ட மனோரமா, 1939, மே 26 அன்று மன்னார்குடியில், காசி கிளார்க்குடையார் மற்றும் ராமாமிர்தம் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.

3. “ஆச்சி” என அன்போடு அழைக்கப்படும் மனோரமா 12வது வயதிலேயே ஒரு நாடக கலைஞராக தனது கலைப்பணியை ஆரம்பித்தார்.

4. சிறு வயதிலேயே நன்றாக பாடும் திறமை கொண்ட மனோரமா, நாடகத் துறையில் சிறந்து விளங்கி அன்று “பள்ளத்தூர் பாப்பா” என அன்போடும் அழைக்கப்பட்டார்.

5. இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்த நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர், கோபிசாந்தா என்றிருந்த இவரது இயற்பெயரை “மனோரமா” என மாற்றி அமைத்தனர்.

6. “வைரம் நாடக சபா”, “எஸ் எஸ் ஆர் நாடக மன்றம்” போன்ற நாடக கம்பெனிகளில் நடித்து வந்த இவருக்கு, “இன்ப வாழ்வு”, “ஊமையன் கோட்டை” ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, படப்பிடிப்பு தொடராமல் பாதியிலேயே நின்று போனது.

7. கவியரசர் கண்ணதாசன் தயாரித்த “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தந்து, வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக அறிமுகமானார் மனோரமா.

8. மனோரமா கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் 1963ல் வெளிவந்த “கொஞ்சும் குமரி”. நாயகனாக ஆர் எஸ் மனோகர் நடித்திருந்தார்.

9. 1964ல் வெளிவந்த “மகளே உன் சமத்து” என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமானார் மனோரமா. ஏறக்குறைய 300 பாடல்கள் பாடியிருக்கிறார்.

10. எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி, அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பணி ஆற்றி தமிழ் திரையுலகில் கோலோச்சியவர் 'ஆச்சி'.

11. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஜோடியாக “ஞானப்பறவை” என்ற திரைப்படத்தில் நடித்து, அனைவரது பாராட்டையும் பெற்றார்.

12. அண்ணாதுரை, மு கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெ ஜெயலலிதா மற்றும் என்.டி ராமாராவ் என ஐந்து முதல்வர்களோடு கலைப்பணியாற்றிய பெருமைக்குரியவர்.

13. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

14. “பத்மஸ்ரீ விருது” உட்பட துணை நடிகைக்கான “தேசிய விருது”, “கலைமாமணி”, “என் எஸ் கே விருது”, “அண்ணா விருது”, “எம் ஜி ஆர் விருது”, “சிவாஜி விருது”, “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தல்' போன்றவை இவரது சீர்மிகு கலைப்பணிக்கு சிறிய சான்றுகள்.

15. வெகுஜன மக்களின் மனங்களை வென்றெடுத்த இந்த பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் நாயகியின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து அகம் மகிழ்வோம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement