Load Image
dinamalar telegram
Advertisement

20 ஆண்டுகளில் 20 படங்கள்: சுசீந்திரனின் திரைப்பயணம்

20 ஆண்டுகளில் 20 படங்கள்: சுசீந்திரனின் திரைப்பயணம் Entertainment பொழுதுபோக்கு

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த படம் 2009ம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் சுசீந்திரன் 2003ம் ஆண்டு வெளிவந்த 'நாம்' என்ற படத்தில் நடிகராக, உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்படி அவர் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. வெண்ணிலா கபடி குழுவிற்கு பிறகு நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, வில் அம்பு, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சேம்பியன், ஈஸ்வரன், குற்றம் குற்றமே, வள்ளிமயில் உள்பட 20 படங்களை இயக்கி உள்ளார்.

தனது 20 ஆண்டு திரைப் பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2003ல் உதவி இயக்குனராக எனது தொடங்கிய எனது சினிமா வாழ்க்கை வெண்ணிலா கபடிகுழு முதல் வள்ளிமயில் வரை 20 திரைப்படங்களை எனது இயக்கத்தில் இந்த சினிமாதான் எனக்கு எல்லாமே தந்தது. இந்த நேரத்தில் எனது குரு சபாபதி, எழில், என்னுடைய நண்பர்கள், எனது உதவி இயக்குனர்கள், எனது தொழில்நுட்ப கலைஞர்கள், எனது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement