Load Image
dinamalar telegram
Advertisement

விடுதலைக்கு வாழ்த்து சொல்ல மறந்த அசுரன் அன் கோ

விடுதலைக்கு வாழ்த்து சொல்ல மறந்த அசுரன் அன் கோ Entertainment பொழுதுபோக்கு

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளையராஜா இசையில் நேற்று வெளியான படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதேசமயம் நேற்று படம் வெளியான பின்னர் படத்தையும், சூரியின் நடிப்பையும் வெற்றிமாறனின் டைரக்ஷனையும் பாராட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் இதற்கு முன்னதாக அசுரன் என்கிற அசுரத்தனமான ஹிட் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருந்தார். அந்த படத்தில் நடித்திருந்த வெற்றிமாறனின் ஆஸ்தான நாயகன் தனுஷ், அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக அடி எடுத்து வைத்த மஞ்சு வாரியர், மற்றும் வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஆகிய மூவரும் ஏனோ இந்த விடுதலை படத்திற்கு கூட வாழ்த்து சொல்ல மறந்து விட்டார்கள் போல தெரிகிறது.

மூவரது சோசியல் மீடியா பக்கங்களிலும் விடுதலை படம் குறித்தோ, வெற்றிமாறன் குறித்தொ எந்த விதமான வாழ்த்து பதிவுகளும் இடம் பெறவில்லை. இதை நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒருவேளை மூவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கின்றனரோ என்னவோ..?

நேற்று முன்தினம் ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்த ஜி.வி பிரகாஷ் நேற்று வெளியாகி உள்ள விடுதலை படம் தனது ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் படம் என்பதுடன், தனது சகோதரி பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ள படம் என்பதற்காக கூட ஒரு வாழ்த்து கூறியிருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement