
ஜூனியர் என்டிஆர் படத்திற்கு ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர்

பிரபல ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர் பிராட் மின்னிச். கடலுக்குள் அமைக்கப்படும் காட்சிகள், பிரமாண்ட இயற்கை பேரழிவு காட்சிகளை உருவாக்குவதில் இவர் நிபுணர். ஜஸ்டிஸ் லீக், தி குட் லார்ட் பேர்ட், அக்குவாமேன், பேட்மேன் வெசஸ் சூப்பர் மேன் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்தவர்.
இவர் முதன் முறையாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரது 30வது படத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ஏற்கெனவே ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குனர் பென்னி படேலும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தை யுவசுதா ஆர்ட்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படம் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார். கொரட்டாலா சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியன் படமாக 2024 ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!