Load Image
dinamalar telegram
Advertisement

'ஆதி புருஷ்' வெற்றிக்கு வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு

'ஆதி புருஷ்' வெற்றிக்கு வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு Entertainment பொழுதுபோக்கு

பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்து பணிகளை தொடங்கி உள்ளனர். வைஷ்ணவி தேவி கோயிலில் நடந்து வரும் சைத்ர நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட இவர்கள் படத்தின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.

”வைஷ்ணவி தேவி எங்கள் குல தெய்வம். எந்த காரியத்தை தொடங்கினாலும் அவளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றே தொடங்குவோம். ஆதி புருஷ் படத்தின் பணிகளை அப்படியே தொடங்கி உள்ளோம். பெரும் வெற்றியை அவள் எங்களுக்கு தருவாள்” என்கிறார் தயாரிப்பாளர் பூஷண் குமார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement