
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி

தெலுங்குத் திரையுலகத்தில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் ஆக்டிவ் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கில்டு என்ற இரண்டு முக்கிய தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளன. ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போதும் தொடர்ந்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எப்போதோ படமெடுத்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு வேட்புமனு தாக்கல் செய்துள்ளாராம். அவருடன் இன்னும் இரண்டு தயாரிப்பாளர்கள் அதே தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்களாம்.
'வாரிசு' பட வெளியீட்டின் போது தனக்கெதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்பியதுதான் தில் ராஜு போட்டியிடுவதன் காரணம் என்கிறார்கள். கடந்த சில நாட்களாக தில் ராஜுக்கும், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்துக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது. அதை மறந்து அல்லு அரவிந்த் ஆதரவு தெரிவித்தால் தில் ராஜு நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!