
விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புரோமோ வீடியோவில், காஷ்மீரில் சாக்லேட் தயாரித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அடுத்து இரும்பு பட்டறையில் வாள் ஒன்றை செதுக்கி கொண்டு இருக்கிறார். அவரது பின்னணியில் சிலுவை படம் இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. அதையடுத்து ஒரு மிகப்பெரிய கும்பல் அவரை தேடி வருவது போன்று ஒரு ஷாட் அமைந்துள்ளது. அந்த கும்பல் தன்னை நெருங்கி வந்ததும் சாக்லெட்டில் முக்கிய வாளை கையில் எடுத்து, பிளடி ஸ்வீட் என்கிறார் விஜய்.
மேலும் இந்த படம் அக்டோபர் 19ம் தேதி அன்று ரிலீசான இருப்பதாகவும் அறிவித்து விட்டார்கள். முக்கியமாக இந்த படத்தில் டீக்கடை ஓனராக நடித்திருக்கும் விஜய், தனது தம்பியின் கொலைக்கு பிறகு கேங்ஸ்டராக உருவெடுப்பதாக முன்பு இப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது கைதி, விக்ரம் போன்ற படங்களில் தமிழக அளவிலான போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து படமாக்கி இருந்த லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக போதை சாக்லேட்டுகள் குறித்த தகவல்கள் வெளியே வருவதால் அது சம்பந்தப்பட்ட ஒரு கதையாக மையமாக வைத்து இந்த லியோ படத்தை அவர் இயக்கி வருவதாகவும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!