
தியேட்டர்களில் வெளியான 6 படங்கள் தொடர் தோல்வி ; தடுமாறும் மோகன்லால்

மலையாள திரையுலகில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் முதன்முறையாக மலையாள திரையுலகில் 200 கோடி வசூலித்த திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது. ஆனால் அதைத்தொடர்ந்து இப்போது வரை தியேட்டரில் வெளியான மோகன்லாலின் ஆறு படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளன.
அதே சமயம் இந்த மூன்று வருடங்களில் ஓடிடியில் வெளியான ப்ரோ டாடி, திரிஷ்யம்-2 மற்றும் டுவல்த் மேன் ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தியேட்டரில் வெளியான ஆராட்டு மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவின. சமீபத்தில் மோகன்லால் தனி ஒருவராக நடித்திருந்த ஆலோன் திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகி தோல்வியையே சந்தித்துள்ளது.
இதனால் மோகன்லால் படங்கள் தியேட்டரில் வெளியானால் தோல்வி, ஒடிடியில் வெளியானால் ஹிட் என்பது போன்று ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் அவர் நடித்துள்ள ராம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது. இந்த படம் இப்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய மாயையை உடைத்து மீண்டும் தியேட்டர்களில் மோகன்லால் வெற்றிக்கொடி கட்ட உதவும் என எதிர்பார்க்கலாம்.
வாசகர் கருத்து (2)
நம்பியார் காலத்துல பெரும்பாலும் வில்லனோட செகிரட்டரிக்கு ஸ்டெல்லா ஜூலி அப்படின்னு பேரு வெச்சாங்களே அப்பாவும் நீங்க பொங்குனீங்களோ. சினிமாவை சினிமாவா பாக்க தெரியாத ஒரு கூட்டம்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஹிந்து மதத்தை இழிவு செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தை தூக்கி பிடித்தால் இப்படித்தான். இங்கும் பொங்கலுக்கு வெளியான ஒரு உச்ச நடிகர் படத்தில் ராமசந்திரன் என்ற நபர் கொலைகாரனாகவும், மைக்கேல் என்ற நபர் நல்லவனாகவும் காண்பித்துயிருப்பார்கள். இந்த படத்தை பார்பதுர்கு சென்ற ஒரு நபர் இறந்ததுதான் மிச்சம். தயவு செய்து இதுபோல் கூத்தாடிகளை தூக்கி கொண்டு அலையாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் நன்றாக இருக்கிறது.