
நானும் சாதாரண மனுஷி தான்! ரசிகருக்கு யாஷிகா அட்வைஸ்

சினிமா, சின்னத்திரை, இன்ஸ்டாகிராம் என எந்த பிரேமில் வந்தாலும் கவர்ச்சிக்கு என்றே அளவெடுத்து செய்த நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கென வெறித்தனமான ஒரு பெரிய ரசிகர் படையே உள்ளது. சோஷியல் மீடியாக்களில் இவருக்காக பல பேன் பேஜ்ஜுகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'டிவோட்டீஸ் ஆப் யாஷிகா' என்கிற பக்கம் தீவிரமாக யாஷிகாவை புரொமோட் செய்து வருகிறது. அதன் ஸ்டோரிகளில் யாஷிகாவின் புகைப்படத்தின் முன் ரசிகர்கள் காலை, மாலை என பாரபட்சம் பார்க்காமல் விழுந்து வணங்கி, விளக்கு ஏற்றி பூஜை செய்யும் புகைப்படங்களை வரிசையாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், யாஷிகாவை கடவுளாக பாவித்து ‛காட்ஷிகா' என பெயர் வைத்து ஹாஸ்டேக்கையும் பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் பொதுஜனங்களுக்கு 'டேய் என்னடா பண்றீங்க?' என்று கேள்விகள் எழுவதில் வியப்பில்லை. அதிலும் ஒருபதிவில், 'யாஷிகாவின் பாதத்தை வணங்குவதில் தான் எனக்கு மகிழ்ச்சி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாஷிகாவின் கவனத்திற்கு இந்த பதிவு வரவே, அவர், 'நான் சாதாரண மனுஷி தான். அன்பை பகிருங்கள். கடவுளை மட்டும் வணங்குங்கள். கடவுளே மேலானவன்' என்று அட்வைஸ் செய்துள்ளார். போகிற போக்கை பார்த்தால் குஷ்பு, நமீதா, நயன்தாராவை பீட் செய்து விரைவில் யாஷிகாவுக்கும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்கள் இந்த வெறிப்பிடித்த ரசிகர்கள்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!