
இது தீட்டு..., அவுங்க கோயிலுக்கு வரக்கூடாது... என எந்த கடவுளும் சொல்லவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்' அதேபெயரில் தமிழில் ரீ-மேக் ஆகி உள்ளது. கண்ணன் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக ராகுல் நடித்துள்ளார். பிப்., 3ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது. சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளித்தார்.
சபரிமலை என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கோயிலிலும் எந்த கடவுளும் இப்படி செய்யக்கூடாது, அப்படி செய்யக்கூடாது, இத சாப்பிடனும், சாப்பிடக்கூடாது, இதெல்லாம் தீட்டு என்று சொல்லவில்லை. இது நாம் உருவாக்கியது. இதற்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஒருபோதும் நம்புவதில்லை.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
வாசகர் கருத்து (32)
உன் கருத்து தவறு. உன்னை யாரும் கருத்து சொல்ல அழக்கவில்லை. ஒவ்வொரு கோவிலும் பலவிதமான பூஜை முறைகள் பின்பற்றபடுகின்றன. தயவு செய்து இந்துக்கள் மனதை புண்படுத்தாதீர்கள்
தமிழ்நாட்டில் தெற்கு பகுதி அம்மன் கோயில் ஒன்றில் அம்மனுக்கே மாதம் மூன்று நாட்கள் என்று சொல்லி அந்த மூன்று நாட்களும் கோவிலை கழுவி சுத்தம்செய்துவிடுவது இந்த அம்மணிக்கு தெரியுமா. பெரியவர்கள் எதையும் காரணமில்லாமல் சொல்லவில்லை. அம்மணிக்கு வாயில் சனி இருப்பதுபோல் தெரிகிறது. எதற்கும் சற்று அடக்கிவாசிப்பது இவருக்கு நல்லது.சனி என்ன பாடுபடுத்துவார் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
உனக்கு எப்படி தெரியும் சுவாமி தீட்டுடன் கூட கோவிலுக்கு வரலாம் என்று? உன்னிடத்தில் சுவாமி சொல்லியதா? ஏதாவது மடத்தனமாக சொல்லிவிட்டு எல்லாம் தெரிந்த முட்டாள் என்று காட்டிக்கொள்ள வேண்டியது.... உன் வேலை நடிப்புக்கு துட்டு அவ்வளவு தான்..
எந்த கடவுள் உன்னை கோயிலுக்கு கூப்பிட்டார்? ஏன் இந்த ஈவெராயிசம்... உனக்கு நம்பிக்கையில்லை என்றால் அதை உன்னோடு நிறுத்தி விடு... அநாவசியமாக பொதுவெளியில் கூறாதே...
With regards to religious beliefs and temple visits, it is better to follow what tradition the temple follows. Do not question or argue. That's the rule one should follow. You actors think too much that you know of. Bloody hell.