
டுவிட்டருக்கு மீண்டும் வந்த கங்கனா ரணவத்

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்துக்களைப் பதிவிட்டு வந்தவர்களில் ஒருவராக இருந்தார். அரசியல் சார்ந்தும் சில கருத்துக்களை அவ்வப்போது பதிவிடுவார். 2021ம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்களாத்தில் சட்டசபை தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறை பற்றி பல கருத்துக்களைப் பதிவிட்டார். அப்போது அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதனால், அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடக்கப்பட்ட அவரது கணக்குக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு முடக்கப்பட்ட, நீக்கப்பட்ட பல பிரபலங்களின் கணக்குகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வருகிறார். அந்த வகையில் கங்கனா கணக்கும் மீண்டு வந்துள்ளது.
“அனைவருக்கும் ஹலோ, மீண்டும் இங்கு வந்தது சிறப்பு,” என கங்கனா பதிவிட்டுள்ளார். அவரது வருகைக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இனி தொடர்ந்து கங்கனாவின் அதிரடி கருத்துக்களை டுவிட்டரில் எதிர்பார்க்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!