
சமந்தா போல் அரிய வகை நோயால் அவதிப்படும் பூனம் கவுர்

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்பட பல படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பூனம் கவுர். தற்போது நண்டு என் நண்பன், கெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பைப்ரோமியால்ஜியா என்ற ஒரு அரிய வகை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தசை வலியுடன் கூடிய உடல் சோர்வு தூக்கமின்மை, மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் இந்த நோயின் பாதிப்புகள் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நோயினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்த போதும் தற்போது இந்த நோயுடன் தான் வாழ பழகி கொண்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நோய் பற்றி பூனம் கவுர் இன்ஸ்டாவில், ‛‛பைப்ரோமியால்ஜியாவால் பல திட்டங்களைக் கொண்ட ஒரு உந்துதல் பெற்ற நபர் எதையும் செய்ய முடியாமல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்'' என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பலரும் அவர் விரைந்து குணமாக வேண்டுவதாக கருத்து பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகை சமந்தா மயொசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தொடர்ந்து தற்போது பூனம் கவுரும் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
கடவுளின் அருள் இருந்தால், சித்தா- ஆயுர் வேத சிகிச்சைக்கு சென்று பலனடைவார். இல்லாவிடில், பெரும் செல்வத்தை ஆங்கில மருந்து மூலம் இழந்து, பக்க விளைவாக பல நோய்களை பெறுவர்.
வானத்தில் இருந்து குதித்து வந்த தேவதைகள் மாதிரி ஓவரா சீன் போடும் போது எரிச்சல் வருகிறது. நாட்டில் எத்தனையோ பேர் எவ்வளவு மோசமான நோயுடன் வாழ்க்கை நடத்திக்கொண்டு அதை தனது சொத்தை விற்றோ அல்லது கடன் வாங்கியோ கூட நோயை சமாளித்து வாழ்ந்து வருகிறார்கள்... இவளுக்கு திமிரெடுத்துப் போய் தேவையில்லாத எல்லா கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொண்டு என்னமோ நோய்க்கு சிகிச்சை எடுக்கவும் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருப்பதைப் போலவும் ஓவரா எதுக்குடா இந்த சீன்...