Load Image
dinamalar telegram
Advertisement

ரஜினி நடிக்கும் இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியானது

ரஜினி நடிக்கும் இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியானது Entertainment பொழுதுபோக்கு

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரஜினி அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து தகவல்களும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு செய்தியும், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாகவும் இரண்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் ஜெயிலர் படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இரண்டு படங்களில் ரஜினியின் 170 வது படத்தை சிபி சக்ரவர்த்தியும், 171-வது படத்தை தேசிங்கு பெரிய சாமியும் இயக்குவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்களை லைகா நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.



வாசகர் கருத்து (5)

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    ஓடும் குதிரை அதனால் தான் ரேஸில் இருக்கிறது.

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    கடும் உழைப்பாளி

  • Raj - Chennai,இந்தியா

    ஒரு age க்கு அப்புறம் வீட்டுல இருந்து பொண்ணோட விவாகரத்து பிரச்சனைய தீரும்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ……

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    …..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement