Load Image
dinamalar telegram
Advertisement

வாரிசு - குஷ்பு வெளியிட்ட தகவல்

வாரிசு - குஷ்பு வெளியிட்ட தகவல் Entertainment பொழுதுபோக்கு

சமீபகாலமாக அரசியலில் பயணித்து வரும் குஷ்பு தனது உடல் எடையை குறைத்து சினிமாவிலும் கவனத்தை திருப்பி இருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் ஷர்வானந்த் - ராஷ்மிகா மந்தனா நடித்த அடவல்லு மீக்கு ஜோஹார்லு என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் குஷ்பு முக்கிய கேரக்டர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது ஐதராபாத்தில் இன்னொரு தெலுங்கு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வரும் குஷ்பு, விஜய் படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். வாரிசு படத்தில் விஜய் மட்டுமின்றி தனது மாஜி ஹீரோக்களான பிரபு, சரத்குமார் ஆகியோரை சந்திப்பதற்காகவே தான் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு சென்றதாகவும், அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆனதால் விஜய் படத்தில் தான் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன என்றும் குஷ்பு தெரிவித்திருக்கிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement