Load Image
dinamalar telegram
Advertisement

ஆதிபுருஷ் 3டி டீசரை ரசிகர்களுக்காக 60 தியேட்டர்களில் திரையிடும் பிரபாஸ்

ஆதிபுருஷ் 3டி டீசரை ரசிகர்களுக்காக 60 தியேட்டர்களில் திரையிடும் பிரபாஸ் Entertainment பொழுதுபோக்கு

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசரை அக்டோபர் இரண்டாம் தேதி அயோத்தியில் வெளியிட்டார்கள். ஆனால் இந்த டீசர் மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி சோசியல் மீடியாவில் டிரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தெலுங்கு ஊடகங்களுக்கு ஆதிபுருஷ் படத்தின் 3டி டீசரை திரையிட்டு காண்பித்துள்ளார்கள். ஐதராபாத்தில் உள்ள ஏஎம்பி திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடைபெற்றுள்ளது.

அதையடுத்து மீடியாக்களை சந்தித்த பிரபாஸ், ‛‛ஆதிபுருஷ் படத்தின் 3டி பதிப்பு அபரிமிதமான வரவேற்பு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. எனது படத்தை 3டி இல் பார்த்தது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். அதனால் திரையரங்கில் இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிப்படுத்தும். அதில் எந்த சந்தேகமும் இல்லை'' என்றார்.



வாசகர் கருத்து (3)

  • தமிழன் - கோவை,இந்தியா

    ஆம்...நம் பொன்னியின் செல்வன் படத்தை வேண்டுமென்றே ராஜமெளலியின் மவுசுக்காக தரமில்லாத விமர்சனங்களை வாரி வாரி இறைத்த இந்த தெலுங்கன்களின் படத்தை இங்கு நாம் புறக்கணிக்க வேண்டும். தயவுசெய்து தெலுங்கு படத்தை வேண்டுமென்றே தரமில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம்... பிறகு அவனுகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...தெலுங்கு படத்தை இங்கு புறக்கணியுங்கள் போதும்....

  • Radhakrishnan -

    தெலுங்கு மாநிலங்களைத் தவிர வேறெங்கும் இந்தப் படம் ஒடப் போவதில்லை. சகல வியாபாரத் தந்திரங்களையும் முயற்சிப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement