Load Image
dinamalar telegram
Advertisement

பிக்பாஸிற்காக எண்ட் கார்டா? புது சீரியலுக்கு வந்த சோதனை

பிக்பாஸிற்காக எண்ட் கார்டா? புது சீரியலுக்கு வந்த சோதனை Entertainment பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 6 வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சிக்காக சீரியல் பார்ப்பதை கூட பலரும் நிறுத்திக்கொள்வார்கள். இந்நிலையில், இரவும் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புதிதாக ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ள ஹிட் தொடரையே விஜய் டிவி முடித்து வைக்க உள்ளது.

விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்த புத்தம் புதிய தொடர் 'பாரதிதாசன் காலனி'. மிகக்குறுகிய காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரானது தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு தற்காலிகமாக முடித்து வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் முந்தைய சீசனின் போதும் 'செந்தூரப்பூவே' தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் முடிந்த பின் மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த அந்த தொடரால் டிஆர்பியில் சரியாக பெர்பார்மன்ஸ் செய்ய முடியவில்லை. எனவே, அந்த தொடர் கைவிடப்பட்டது. தற்போது ஹிட் தொடராகிய பாரதிதாசன் காலனிக்கும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதால், அதில் நடித்து வரும் நடிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். எனினும், அந்தத்தொடர் நிறுத்தப்படாமல் வேறு ஏதேனும் நேரத்தில் ஒளிபரப்பாகுமா? என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.



வாசகர் கருத்து (1)

  • தமிழன் - கோவை,இந்தியா

    கம்முன்னு ஆகாவளி ரம்பம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொ(ல்லை)டரை தயவுசெய்து நிறுத்தி விடுங்கள். இதற்கு ஆம்லெட் சண்டை, கக்கூஸ் சண்டை, பீரோ சண்டை, சமையல் சண்டை, டிவி பார்த்தால் சண்டை, படுக்கும் அறை சண்டை, திண்ணை சண்டை, ஓட்டல் சண்டை, வீட்டு வேலை சண்டை, கடையை நிர்வாகம் செய்வதில் சண்டை, தின்பதில் சண்டை, பிரியாணி சண்டை, புடவை சண்டை, பியூட்டி பார்லர் சண்டை, சமையல் செய்ய சண்டை, குடும்ப சண்டை என பல டைட்டில்களை வைக்கலாம்....மிக பொருத்தமாக இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement