Load Image
dinamalar telegram
Advertisement

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து Entertainment பொழுதுபோக்கு

பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் சூசன்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார். மதுரையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர் ,இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பின்னணி பாடகர் கிருஷ், அந்தோணிதாசன் பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement