Load Image
dinamalar telegram
Advertisement

சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் நடிகர்

சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் நடிகர் Entertainment பொழுதுபோக்கு

சுந்தரி என்னும் ஹிட் சீரியலில் கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்ணு மேனன், ஸ்ரீகோபிகா நீலாநாத் ஆகியோர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் சப்போர்ட்டிங் சித்து என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருபவர் ஜெய் ஸ்ரீநிவாஸ். சுந்தரியின் தோழனாக நடிக்கும் ஜெய் ஸ்ரீநிவாஸூக்கு கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாக பில்டப் இருந்தாலும் சீரியலில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது அவர் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்துள்ளார். ‛பெண்ணின் மகத்துவம்' என்ற பைலட் படத்தில் ஜெய் ஸ்ரீநிவாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில் சக நடிகர்களான ஜிஸ்ணு மேனன், கேப்ரில்லா, கிரேஸி தங்கவேல் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement