
அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் : பேரரசு

மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் பாஜ, அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை அமைதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் போராட்டம் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்த திட்டத்திற்கு போராட்டங்கள் வெடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேச துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து யாரோ இருக்கிறார்கள். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றுவார்கள். பொதுச்சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என்றார்.
வாசகர் கருத்து (7)
Give him.some biscuits
இனிமே தனியார், அரசாங்க வேலைகளுக்கு "தீபாதை" வழியே வந்தவர்களுக்கே, " தீ மிதி பக்தர்கள் போல்" வந்தவர்களுக்கே வேலை, மற்றவர்கள் குவார்டரு, பிரியாணி தொண்டர்களே என்று வரும். இதுவித களப்பணியே. நெல்லிருந்து சண்டு, தூசி, அரிசி இல்லாத பதர் சாவியை தூரத்த தள்ளும் களத் தூற்றலே
இவனுக்கு யாராவது படம் இயக்கும் வாய்ப்பை கொடுங்கப்பா...
ajith. bharat. Arjun. market kaali pannaru. aduthu ji kaali
நீ இவளவு நாலா எங்க சாமி இருந்த?
.....
summa irukar Polayaravathu pada vaipu kodunga