Load Image
dinamalar telegram
Advertisement

25வது நாளை எட்டிய கமலின் விக்ரம் : வசூல் எவ்வளவு தெரியுமா

25வது நாளை எட்டிய கமலின் விக்ரம் : வசூல் எவ்வளவு தெரியுமா Entertainment பொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் இம்மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வந்த விக்ரம் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்போது வரை நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தப்படத்தின் வசூல் காரணமாகவே ஏற்கனவே தமிழில் வெளியாக இருந்த யானை உள்ளிட்ட சில படங்களின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தார்கள். அதோடு தமிழகத்தில் பாகுபலி -2 படத்தின் வசூலை விக்ரம் படம் தாண்டி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இந்த படம் 25 நாட்களை எட்டி உள்ளது. அதோடு ஏரியா வாரியாக விக்ரம் படம் வசூல் செய்த தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் 162 கோடி, கேரளாவில் 36 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 29 கோடி, கர்நாடகாவில் 22 கோடி இது தவிர வெளிநாடு ரிலீஸ் என ஒட்டுமொத்தமாக விக்ரம் படம் இதுவரை 375 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • INNER VOICE - MUMBAI,இந்தியா

    என்னதான் வசூலில் சாதனை படைத்தாலும், படம் மொக்கை தானே. ஒரு படம் வசூல் சாதனைக்கு விளம்பர யுக்திதான் வேண்டும். படத்தின் தரத்திற்கு இது சம்பந்தமில்லை. நான் தியேட்டரில் படம் பார்த்த தற்கு வருந்துகிறேன்.

    • vinu - frankfurt,ஜெர்மனி

      இப்படிக்கு கஜினி ரசிகன்

  • suresh kumar - Salmiyah,குவைத்

    எவ்வளவு வசூல் வந்தாலும் 'ரெட் ஜெயண்ட்' டுக்குத்தானே எல்லா தயாரிப்பாளர்களும் அன்பாக தந்துவிடுவார்களாமே?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement