
விஜய் 66 : இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய்

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்கள் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை விஜய் சந்திக்க சென்றார். அப்போது அவர் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார். அதையடுத்து தற்போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். ஹாய் செல்லம் நாங்கள் மீண்டும் திரும்பி விட்டோம் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் விஜய் சற்று வயதான ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார். அதனால் ஏற்கனவே வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் இரண்டு விதமான புகைப்படங்கள் வெளியாகி இரண்டு வேடங்களில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளன.
வாசகர் கருத்து (2)
கடவுளே கடவுளே
nadippaa? vijay ya? 😀😀😀 kilo how much?