
ஆஸ்கர் தகுதி பட்டியலில் மோகன்லால் படம்

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. தேசிய விருது வென்ற இந்த படம் இப்போது ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் தகுதிபெற்ற 276 படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. இதில் 'மரைக்காயர்' படமும் இடம் பெற்றுள்ளது. இந்த படம் தவிர்த்து சூர்யாவின் ஜெய்பீம் படமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!