
மைக்கேல் படத்தில் இணைந்த வரலட்சுமி

தமிழில் விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கியவர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. அதையடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தை இயக்கியவர், தற்போது சந்தீப் கிஷனை நாயகனாக வைத்து மைக்கேல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஆக்சன் கதைகள் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் தயாராகி வருவதோடு கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தில் வரலட்சுமியும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் நடித்து வரும் வரலட்சுமி இந்த படத்தில் வில்லி, குணச்சித்திர வேடம் என எந்த மாதிரி ரோலில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!