dinamalar telegram
Advertisement

விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

Share
விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல் Entertainment பொழுதுபோக்கு

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் படப் பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்த படத்திலும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனே நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பிப்ரவரி 17 என்பதால் பிப்ரவரி 18-ந்தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதே தேதியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் வெளியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் விஜய் சேதுபதியும் - சிவகார்த்திகேயனும் ஒரேநாளில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.

இதற்கு முன்பு 2013ல் எதிர்நீச்சல், சூதுகவ்வும், 2016ல் ரெமோ, றெக்கை ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயனின் படங்கள் ஒரேநாளில் வெளியாகின்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

    தினமலரே சினிமா செய்திகளை பதிவிடாதே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement