dinamalar telegram
Advertisement

10 பேரையாவது பிட்டாக மாற்றினால் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன் - குஷ்பு

Share
10 பேரையாவது பிட்டாக மாற்றினால் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன் - குஷ்பு Entertainment பொழுதுபோக்கு

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் மீண்டும் நடித்த குஷ்பு, கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் காலகட்டத்தில் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து ஸ்லிம்மாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் சிலர் குஷ்புவுக்கு ஏதோ உடம்பில் பிரச்சினை அதனால் தான் மெலிந்துவிட்டார் என்று கருதியும் அவரி டத்தில் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினார்கள்.

குஷ்பு கூறியிருப்பதாவது : ‛‛20 கிலோ வெயிட் குறைத்து அங்கிருந்து இங்கு வந்துள்ளேன். நான் நல்ல உடல் ஆரோக்யமாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமே செல்வம். உங்களுக்கு உடம்பு சரி யில்லையா என்று விசாரிக்கும் நண்பர்களுக்கு நன்றி. இதற்கு முன்பு நான் இத்தனை பிட்டாக இருந்ததில்லை. உங்களில் ஒரு பத்து பேரையாவது வெயிட் குறைத்து பிட்டாக இருக்க தூண்டினால் நான் வெற்றி பெற்றுள்ளதாக கருதுவேன்'' என்கிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Suri - Chennai,இந்தியா

    இப்போது சேர்ந்துள்ள கட்சி கோரிக்கையாக இருக்குமோ? அதுவும் அந்த கட்சிக்கு ரொம்ப நல்ல பெயர் இந்த விஷயத்தில்.

  • sri - trichy,இந்தியா

    பார்க்க நன்றாக இல்லை எங்களுக்கு அந்த குஷ்பு தான் வேண்டும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement