dinamalar telegram
Advertisement

‛‛அநீதிக்கு எதிரான மவுனம் ஆபத்தானது'' : கவனம் பெறும் சூர்யாவின் ஜெய் பீம் டிரைலர்

Share
‛‛அநீதிக்கு எதிரான மவுனம் ஆபத்தானது'' : கவனம் பெறும் சூர்யாவின் ஜெய் பீம் டிரைலர் Entertainment பொழுதுபோக்கு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ஜெய் பீம். பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒரு கூரையில்லாத ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ஜெய் பீம் விவரிக்கிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கதையில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்தவாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதுவரை வெளியான சூர்யா படங்களின் டீசர் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. இந்நிலையில் இன்று(அக்., 22) படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போலீஸ் காட்டும் அடக்குமுறை, அவர்களின் நீதிக்காக போராடும் சூர்யா என டிரைலர் காட்சிகள் பரபரப்பாக அமைந்துள்ளன.

‛‛பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கணும், அதை நீதிமன்றம் உறுதி செய்யணும். தப்பு செய்பவர்களுக்கு ஜாதி, பணம் என நிறைய இருக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம தான இருக்கோம். நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மவுனம் ஆபத்தானது'' உள்ளிட்ட வசனங்கள் டிரைலரில் கவனம் ஈர்த்துள்ளன. பரபரப்பாக நகரும் டிரைலர் காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ.,2 ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • Aarkay - Pondy,இந்தியா

  Deccan Airways கோபிநாத் அய்யங்காரை, சூரரைப்போற்று திரைப்படத்தில் உங்கள் இஷ்டத்திற்கு ஜாதி மாற்றியாயிற்று. மீனவரின குத்துச்சண்டை வீரரையும் சார்பாட்டா-வில் ஜாதி மாற்றியாயிற்று. இன்னும், கர்ணன், அசுரன், என எங்கு பார்த்தாலும் ஜாதிப்படங்களே முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே இருந்த நிலை வேறு. இன்றுள்ள நிலை வேறு. இன்று, நண்பர்களை தேடும்போதோ, பணியிடத்திலோ, யாரும் ஜாதியை பிரித்து பார்ப்பதில்லை. நீங்கள்தான் மீண்டும், மீண்டும் நினைவூட்டி ஜாதி தீ அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இனி இதுபோன்ற ஜாதீய படங்களை பகிஷ்கரிப்போம். தமிழ்திரையுலகம் இன்று converted-களின் கைகளிலும், இல்லாத ஒன்றை இருப்பதாய் கற்பனை செய்து புலம்பும் ஜாதிப்பிரிவினைவாதிகளின் கையிலும் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. இவர்களின் அல்டிமேட் குறிக்கோள் தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்வது மட்டுமே. இது ஒரு கேவலமான ஜந்து

 • Prasanna Krishnan -

  தில் இருந்த உன் முதல்வர் ஸ்டாலினை திட்டு.

 • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

  என்ன மோடி ய திட்டணுமா நாலடியாரே

 • கோவிந்தா -

  ஆம், திரையுலகை வாரிசு நடிகர்கள் முழுங்க முயல்வது ஆபத்தானது.... இனி வாரிசு நடிகர்கள் படத்தை பார்க்காதீர்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement