dinamalar telegram
Advertisement

6 வருடக் காதலைக் கொண்டாடும் விக்னேஷ் சிவன்

Share
6 வருடக் காதலைக் கொண்டாடும் விக்னேஷ் சிவன் Entertainment பொழுதுபோக்கு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நேற்றுடன் 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலர்களாகவே இருந்து வருகிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

இதனிடையே, தங்களது காதலின் ஆறு வருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜோடிப் புகைப்படங்களை வெளியிட்டு, “ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்று தெரியவில்லை. நானும் ரௌடிதான் படத்தின் போது காத்து வாக்குல எடுத்த சில தருணங்கள்,” என தனது காதலைக் கொண்டாடுகிறார் விக்னேஷ் சிவன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • சாம் -

    மானம் கெட்ட காதல் என்று நக்கிநேஷ் அடுத்த படம் அறிவிப்பு....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement