dinamalar telegram
Advertisement

வலிமை வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்: பிரசன்னா

Share
வலிமை வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்: பிரசன்னா Entertainment பொழுதுபோக்கு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலிமை திரைப்படம் தொடர்பாக பேட்டியளித்த இயக்குனர் எச்.வினோத், ‛அஜித் கதையைக் கேட்டதும், வில்லன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பதாகச் சொன்னதாக,' குறிப்பிட்டார்.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் பிரசன்னா, ‛எனது அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. வலிமை வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்றாலும் கூட பெரிய விஷயங்கள் என்னைச் சேரும் என்று நம்புகிறேன்.' எனப் பதிவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement