புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், புதிய வீடுகள் சப்ளையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான பிராப்டைகர் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து, 70 ஆயிரத்து 623 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை, 66 ஆயிரத்து 176 வீடுகளாக இருந்தது. மும்பை, புனே, ஆகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.
அதேசமயம் டெல்லி, சென்னை, ஹைதராபாத், கோல்கட்டா ஆகிய நகரங்களில் விற்பனை சரிவை கண்டுள்ளது. சென்னையில் மட்டும் 26 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.புதிய வீடுகள் சப்ளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வீடுகள் துறை மீண்டு எழுந்து வருகிறது. தேவைகள் அதிகரித்திருப்பது, மற்றும் குறைவான வீட்டுக் கடன் வட்டி ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துஉள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் விற்பனை 7 சதவீதம் உயர்வு
ADVERTISEMENT
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!