Load Image
dinamalar telegram
Advertisement

வீடுகள் விலை அதிகரிப்பு 51வது இடத்தில் இந்தியா

ADVERTISEMENT

புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘நைட்பிராங்க்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளவில், வீடுகள் விலை உயர்வை பொறுத்தவரை, கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியா 56வது இடத்தில் இருந்தது. தற்போது, 2021 டிசம்பர் காலாண்டில், 51வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.முதல் இடத்தில் துருக்கி உள்ளது.

இதன் ஆண்டு விலை வளர்ச்சி விகிதம் 59.6 சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் நியுசிலாந்து உள்ளது. இந்த 56 நாடுகளில், சராசரி ஆண்டு விலை மாற்றம் 10.3 சதவீதமாக உள்ளது.வீடுகளின் விலையில் இருக்கும் போட்டி, வீட்டு கடனுக்கான குறைந்த வட்டி ஆகியவை, புதிய வீடு வாங்கும் உற்சாகத்தை நுகர்வோரிடம் அதிகரித்து உள்ளது. இந்த போக்கு வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement