மும்பை:உலக சந்தைகளின் போக்கை தொடர்ந்து, நேற்று இந்திய பங்குச் சந்தைகளும் உயர்வைக் கண்டன. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்ததில், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில், வட்டி விகிதத்தை 2018ம் ஆண்டுக்குப் பின், முதன் முறையாக உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், உலக சந்தைகள் பல ஏற்றம் கண்டன.இது, இந்திய சந்தைகளிலும் நேற்று பிரதிபலித்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ நேற்று 1,000 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்தது.சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில், ஹெச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள் 5.50 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்தது. இதை அடுத்து, ‘டைட்டன், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், ஏஷியன் பெயின்ட்ஸ்’ ஆகிய நிறுவன பங்குகள் விலையும் உயர்ந்தன. மாறாக, ‘இன்போசிஸ், ஹெச்.சி.எல்., டெக்’ நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
‘ஹோலி’ பண்டிகை பரிசாக பங்குச் சந்தைகள் ஏற்றம்
ADVERTISEMENT
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!