திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர்.
திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:உக்ரைன் –- ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து நாட்டு நிறுவனங்களால், ரஷ்யாவில் உள்ள தங்களது ஆடை வர்த்தக மையங்களை இயக்க முடியவில்லை. இதனால், ரஷ்ய சந்தையை மையப்படுத்தி, ஆடை தயாரிப்புக்கு வழங்கிய ஆர்டர்களை, போலந்து வர்த்தகர்கள் ரத்து செய்து வருகின்றனர். இதனால், திருப்பூரிலும் ஆர்டர் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியா -– ரஷ்யா இடையிலான உறவு பலமாக உள்ளது.இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, ரஷ்யாவுடனான வர்த்தகத்தில், நம் நாட்டு பணமான ரூபாய் பயன்படுத்தப் படுகிறது. எனவே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடைகளால், ரஷ்யாவுக்கான இந்திய நேரடி ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் போரால் திருப்பூரில் ‘ஆர்டர்’ இழப்பு
ADVERTISEMENT
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!