குடியிருப்புகளில் வீடு வாங்கி முதலீடு செய்வதை விட, வீட்டு மனை வாங்குவது அதிக பலன் தருவதாக அமைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.‘ரியல் எஸ்டேட்’ நிறுவனமான ஹவுசிங்.காம் நடத்திய ஆய்வில், 2015ம் ஆண்டிற்கு பின் வீட்டு மனைகளின் விலை, 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதே காலத்தில் குடியிருப்பு வீடுகள் விலை ஆண்டு அடிப்படையில், 2 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
குடியிருப்பு வீடுகளை விட, வீட்டு மனை முதலீடு அதிக பலன் தரலாம் என தெரிவிக்கும் ஆய்வு அறிக்கை, நகர்ப்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு மனைகளின் அளவு குறைந்து வருவதும் இதற்கான காரணமாக குறிப்பிடுகிறது.மேலும், ‘கோவிட் -19’ தாக்கம் காரணமாக பலரும் தனி வீடு, வீட்டு மனைகளை நாடி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் மக்கள் பொதுவாக குடியிருப்புகளை அதிகம் நாடுகின்றனர்.முக்கிய நகரங்களில் குடியிருப்புகளுக்கான தேவை அதிகம் இருந்தாலும், தற்போதைய போக்கின் அடிப்படையில் வீட்டு மனைகளே அதிக பலன் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பலன் தரும் வீட்டு மனை முதலீடு
ADVERTISEMENT
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!