Load Image
dinamalar telegram
Advertisement

‘திவால்’ நிறுவனத்தை வாங்க முயற்சிக்கும் முகேஷ் அம்பானி

ADVERTISEMENT

மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஜவுளித் துறையை சேர்ந்த ‘திவால்’ நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் நிறுவனமான ‘சின்டெக்ஸ் இண்டஸ்டிரீஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.


சின்டெக்ஸ் இண்டஸ்டிரீஸ் பிரபல ‘அர்மானி, டீசல், பர்பெர்ரி’ போன்ற நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனத்தை ஏலத்தின் வாயிலாக கையகப்படுத்த, ‘அசெட்ஸ் கேர் அண்டு ரீகன்ஸ்ட்ரக் ஷன் என்டர்பிரைசஸ்’ எனும் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இணைகிறது.சின்டெக்ஸ் நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க, ரிலையன்ஸ் தவிர மேலும் மூன்று நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

அண்மைக்காலமாக ஆடம்பர ஆடை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்த நிலையில், இப்போது அவற்றுக்கு சப்ளை செய்துவரும் சின்டெக்ஸ் நிறுவனத்தையும் வாங்கும் முயற்சியில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் இறங்கி உள்ளது.இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனம், மேலும் பல உலகளாவிய ‘பேஷன் பிராண்டு’களையும் வாங்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement