dinamalar telegram
Advertisement

மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக குறைப்பு

Share

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த மதிப்பீட்டை ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம், 8.4 சதவீதமாக குறைத்து நிர்ணயித்துள்ளது.
தர நிர்ணய நிறுவனமான பிட்ச் ரேட்டிங்ஸ், சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 8.7 சதவீதமாக இருக்கும் என, அக்டோபரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த மதிப்பீடு, 8.4 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் தேவைப்பாடு அதிகரிக்கத் துவங்கிஉள்ளது. அதற்கேற்ப தயாரிப்பு பொருட்களும் சந்தைக்கு தாராளமாக வரத் துவங்கியுள்ளன. இதனால், 2022 – 23ம் நிதியாண்டில், 10.3 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement