dinamalar telegram
Advertisement

தங்க அடமான கடன் பெறுவது அதிகரிக்கும்

Share

மும்பை:தங்க அடமான கடனை மையமாகக் கொண்டு செயல்படும், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துகள், நடப்பு நிதியாண்டில் 18 -– 20 சதவீதம் உயர்ந்து, 1.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:பண்டிகை காலம் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்துள்ளது ஆகியவை காரணமாக, குறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் தங்க கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இத்தகைய கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement