dinamalar telegram
Advertisement

‘மாஸ்டர்கார்டு’க்கு தடை ‘விசா’வுக்கு தாவிய ஆர்.பி.எல்.,

Share

மும்பை:‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம், புதிய கார்டுகளை வினியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆர்.பி.எல்., வங்கி, ‘விசா’ நிறுவனத்துடன் இணைந்து, புதிய கார்டுகளை வழங்க துவங்கி உள்ளது.
உள்நாட்டில் தரவுகளை சேமிப்பது உள்ளிட்ட விதிகளை பின்பற்றாததை அடுத்து, மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய கார்டுகளை வினியோகம் செய்வதற்கு, கடந்த ஜூலையில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது.இதன் காரணமாக, மாஸ்டர்கார்டு உடன் கூட்டு வைத்திருந்த பல்வேறு வங்கிகள், அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு ‘கிரெடிட் கார்டு’ உள்ளிட்ட கார்டுகளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஆர்.பி.எல்., வங்கி, மாஸ்டர்கார்டின் போட்டி நிறுவனமான, விசா துணையுடன் கார்டுகளை வழங்க துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement