dinamalar telegram
Advertisement

‘கிளென்மார்க் லைப் சயின்சஸ்’ 27ம் தேதி பங்கு வெளியீடு

Share

புதுடில்லி:‘கிளென்மார்க் லைப் சயின்சஸ்’ நிறுவனம், 27ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கின் விலை, 695- – 720 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 27ம் தேதி துவங்கி, 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிறுவனம், கிளென்மார்க் பார்மசூட்டிக்கல்சின் துணை நிறுவனமாகும். இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,513 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,060 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் வசம் இருக்கும், 63 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் பட்சத்தில், இம்மாதத்தில் இது, ஐந்தாவது நிறுவனமாக இருக்கும். இதற்கு முன் இம்மாதத்தில், ஜி.ஆர்.இன்ப்ராபுராஜெக்ட்ஸ், கிளீன் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி, ஸொமேட்டா, தத்வா சிந்தன் பார்மா ஆகிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement