dinamalar telegram
Advertisement

‘குறைதீர்ப்பாளர் செலவை வங்கிகளே ஏற்க வேண்டும்’

Share

மும்பை:எந்த வங்­கி­களில், அதி­க­ள­வி­லான வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து புகார்­கள் வரு­கின்­ற­னவோ; அந்த வங்­கி­களே, இனி­மேல் வங்கி குறை­தீர்ப்­பா­ளர் மன்­றத்­துக்கு ஆகும் செலவை ஏற்க வேண்­டி­ய­தி­ருக்­கும், என ரிசர்வ் வங்கி, அதன் நிதி­ கொள்கை அறிக்­கை­யில் தெரி­வித்­து உள்­ளது.

வங்­கி­களில், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு குறை­கள் தீர்க்­கப்­ப­டா­மல் இருக்­கு­மா­னால், அதை தீர்ப்­ப­தற்­காக, வங்­கிக்­கான, ‘ஒம்­புட்ஸ்­மேன்’ எனும் குறை­தீர்ப்­பா­ளரை அணுகி, முறை­யி­ட­லாம்.ஆனால், சமீப கால­மாக, வாடிக்­கை­யா­ளர்­கள் குறை­களை தீர்த்து வைப்­ப­தில், வங்­கி­கள் அதிக அக்­கறை காட்­டா­த­தால், குறை­தீர்ப்­பா­ள­ரி­டம் அதி­க­ள­வி­லான முறை­யீ­டு­கள் வரு­கின்றன.

இத­னை­ய­டுத்து, ரிசர்வ் வங்கி, இந்த போக்கை தடுத்து நிறுத்­தும் வகை­யில், அதிக எண்­ணிக்­கை­யி­லான வாடிக்­கை­யா­ளர் குறை­க­ளைக் கொண்ட வங்­கி­கள், இனி அதற்­கான, ஒம்­புட்ஸ்­மன் செலவை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­ய­தி­ருக்­கும் என தெரி­வித்­துள்­ளது.

இந்த குறை­தீர்ப்­பா­ளர் அமைப்­பா­னது, ரிசர்வ் வங்­கி­யால், 2006ல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.வங்­கி­களே குறை­தீர்ப்­பா­ளர் அமைப்­புக்­கான செலவை ஏற்­றுக் கொள்ள சொல்­வ­தன் மூலம் வங்­கி­க­ளுக்கு பொறுப்பு அதி­க­ரிப்­ப­து­டன்; ரிசர்வ் வங்­கி­யும் தன்­னு­டைய செலவை குறைத்­துக் கொள்ள முடி­யும் என்­கி­ன்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement