dinamalar telegram
Advertisement

விரைவில் அனைத்து சேவைகள் டி.பி.எஸ்., வங்கி அறிவிப்பு

Share

புது­டில்லி:லட்­சுமி விலாஸ் வங்­கி­யு­ட­னான ஒருங்­கி­ணைப்பு சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­கள் முடிந்­த­தும், வாடிக்­கை­யா­ளர்­கள், வங்­கி­யின் அனைத்து வித­மான சேவை­க­ளை­யும் பெற முடி­யும் என, டி.பி.எஸ்., வங்கி தெரி­வித்­துள்­ளது.

மேலும், டி.பி.எஸ்., வங்­கி­யின் மிக சிறந்த டிஜிட்­டல் பேங்­கிங் சேவை­க­ளை­யும், வாடிக்­கை­யா­ளர்­கள் பெற முடி­யும் என்­றும், இவ்­வங்கி தெரி­வித்­துள்­ளது.இந்த இரு வங்­கி­களின் இணைப்­பும், கடந்த மாதம், 27ம் தேதி முதல் நடை­மு­றைக்கு வந்­தது. இது குறித்து, டி.பி.எஸ்., வங்கி மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

இந்த ஒருங்­கி­ணைப்­பி­னால், லட்­சுமி விலாஸ் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் மற்­றும் டெபா­சிட்­தா­ரர்­க­ளுக்கு முன்­பி­ருந்த நிச்­ச­ய­மற்ற நிலை மாறி, சிறந்த வாய்ப்­பு­கள் உரு­வாகி இருக்­கின்றன. மேலும், ஊழி­யர்­க­ளுக்கு ஸ்தி­ரத்­தன்­மை­யும் ஏற்­பட்­டுள்­ளது.அத்­து­டன், மூல­தன நிதி­யாக, 2,500 கோடி ரூபாயை, சிங்­கப்­பூர் டி.பி.எஸ்., வங்­கி­யி­ட­மி­ருந்து பெறப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, வங்­கி­யின் மூல­த­னம், ஒழுங்­கு­முறை அமைப்­பு­கள் குறிப்­பிட்­டி­ருக்­கும் வரம்பை விட அதி­க­மா­கவே இருக்­கிறது.இவ்­வாறு தெரி­வித்­துஉள்­ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement