புதுடில்லி:வங்கி கணக்கில் மட்டுமல்ல; இனி, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும், குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும் என, தபால் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை, இம்மாதம், 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இனி, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச தொகையாக, 500 ரூபாயை பரமாரிக்க வேண்டும் என்றும், அப்படி பராமரிக்க இயலாத நிலையில், நிதியாண்டின் இறுதியில், அந்த கணக்கிலிருந்து, 100 ரூபாய் பராமரிப்பு கட்டணமாக கழித்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.ஒருவேளை, கழித்துக் கொள்வதற்கான பணம் கணக்கில் இல்லாவிட்டால், அந்த கணக்கு முடித்து வைக்கப்பட்டுவிடும் என்றும், இந்தியா போஸ்ட் தெரிவித்துள்ளது.இம்மாதம், 11ம் தேதியிலிருந்து, இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது, தபால் அலுவலக சேமிப்புக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டித் தொகை, ஒவ்வொரு மாதமும், மாதத்தின், 10வது நாளிலிருந்து கடைசி நாள் வரையிலான காலத்தில் பராமரிக்கப்படும் தொகையை கணக்கிட்டு, வழங்கப்பட்டு வருகிறது.இனி, இந்த காலகட்டத்தில் குறைந்தபட்ச தொகை பராமரிக்கப்படாமல், 500 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அம்மாதத்துக்கான வட்டி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் சேமிப்பு கணக்கில் பணம் இல்லாவிட்டால் அபராதம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!