dinamalar telegram
Advertisement

அன்னிய நேரடி முதலீடு முன்னேறும் கேமேன் தீவுகள்

Share

புது­டில்லி:இது­வரை மொரீ­ஷி­யஸ் நாட்­டி­லி­ருந்து, அதி­க­ள­வி­லான அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் இந்­தி­யா­வுக்கு வந்­து­கொண்­டி­ருந்த நிலை­யில், தற்­போது, அந்த இடத்தை, கேமேன் தீவு­கள் கைப்­பற்றி உள்­ளன.

கடந்த, ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான, ஆறு மாத காலத்­தில், கிட்­டத்­தட்ட, 15 ஆயி­ரத்து, 540 கோடி ரூபாய் அள­வுக்கு, அன்­னிய நேரடி முத­லீ­டு­கள், நம் நாட்­டுக்கு, கேமேன் தீவு­க­ளி­லி­ருந்து வந்­துள்­ளன.

நேரடி முத­லீ­டு­

கேமேன் தீவு­க­ளி­ல்­இருந்து, அதி­க­ள­வில் அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முக்­கிய கார­ணம், சிங்­கப்­பூர் மற்­றும் மொரீ­ஷி­யஸ் நாடு­களின் வரி ஒப்­பந்­தங்­களில், அண்­மை­யில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் தான். இந்த வரி மாறு­தல்­க­ளால், முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான வரி ஆதா­யம் குறைந்து போனது.

கடந்த நிதி­யாண்­டில், இந்­தி­யா­வுக்கு அன்­னிய நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளும் நாடு­கள் பட்­டி­ய­லில், மொரீ­ஷி­யஸ், இரண்­டா­வது இடத்­தில் இருந்­தது. இப்­போது, கேமேன் தீவு­கள், மொரீ­ஷி­யசை பின்­னுக்­குத் தள்ளி, மூன்­றா­வது, இடத்­துக்கு வந்­துள்­ளது. முதல் இரண்டு இடங்­களை முறையே, சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா ஆகிய நாடு­கள் பிடித்­துள்ளன. நான்­கா­வது இடத்­துக்கு, மொரீ­ஷி­யஸ் தள்­ளப்­பட்­டுள்­ளது.

கார்ப்­ப­ரேட் வரி

கேமேன் தீவு­கள் என்­பது, மேற்கு கரீ­பி­யன் கட­லில் இருக்­கும், மூன்று தீவு­களை உள்­ள­டக்­கி­ய­தா­கும். இங்கு கார்ப்­ப­ரேட் வரி, தனி­ந­பர் வரி, நேரடி வரி என எது­வும் கிடை­யாது. கார்ப்­ப­ரேட் வரி கிடை­யாது என்­ப­தால், அன்­னிய நேரடி முத­லீட்­டா­ளர்­கள், தங்­கள் முத­லீ­டு­களை, கேமேன் தீவு­க­ளி­லி­ருந்து அதி­க­ள­வில் மேற்­கொள்­கின்­ற­னர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    இது சட்டவிரோத கருப்பு பணம் என்று தெரிந்தும் மோடி அரசு அனுமதி அளிப்பது எப்படி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement