dinamalar telegram
Advertisement

புத்தாண்டிலிருந்து துவங்கும் ‘ஹார்லி டேவிட்சன்’ சேவைகள்

Share

புது­டில்லி:இந்­தி­யா­வில், தன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை­கள் மற்­றும் உத்­த­ர­வா­தம் ஆகி­ய­வற்றை உறுதி செய்­யும் வகை­யில், ‘ஹீரோ மோட்­டோ­கார்ப்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக, அமெ­ரிக்க பைக் தயா­ரிப்­பா­ள­ரான, ‘ஹார்லி டேவிட்­சன்’ தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில், இந்­திய நேரடி வணி­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தாக அறி­வித்த ஹார்லி டேவிட்­சன், அதன் பைக் விற்­ப­னைக்­காக, ஹீரோ மோட்­டோ­கார்ப் நிறு­வ­னத்­து­டன் கூட்டு வைத்­துக் கொள்­வ­தாக தெரி­வித்­தது.ஒப்­பந்­தப்­படி, ஹீரோ மோட்­டோ­கார்ப் நிறு­வ­னம், ஹார்லி டேவிட்­சன் பைக்­கு­களை விற்­பனை செய்­வது, விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை­களை வழங்­கு­வது ஆகி­ய­வற்றை மேற்­கொள்­ளும்.

மேலும், உதி­ரி­பா­கங்­கள், வாக­னம் ஓட்­டும்­போது பயன்­ப­டுத்­தும் பொருட்­கள்
ஆகி­ய­வற்­றை­யும், ஹீரோ மோட்­டோ­கார்ப் நிறு­வ­னம் அதன் முக­வர்­கள் மூலம் விற்­பனை செய்­யும்.இது குறித்து, ஹார்லி டேவிட்­சன் நிறு­வ­னத்­தின் இந்­திய பிரி­வின் நிர்­வாக
இயக்­கு­னர் சஞ்­சீவ்ராஜ­சே­க­ரன் கூறி­ய­தா­வது:

நிறு­வ­னம், இந்­தி­யா­வில் அதன் வணிக மாதி­ரியை மாற்­றிக் கொண்­டி­ருக்­கிறது. இதை­ய­டுத்து, இந்­தி­யா­வில் எங்­கள் பய­ணத்தை ஹீரோ மோட்­டோ­கார்ப் நிறு­வ­னத்­து­டன் தொடர
உள்­ளோம்.உதி­ரி­பா­கங்­கள் விற்­பனை, விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை­கள், உத்­த­ர­வா­தம்
ஆகி­யவை, அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் துவங்­கும்.இவ்­வாறு அவர்கூறி­னார்.

இதற்­கி­டையே, எந்­த­ வித முன்­ன­றி­விப்­பும் இன்றி, ஹார்லி டேவிட்­சன் தன்­னிச்­சை­யாக
இந்­தி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றி­யதை அடுத்து, தங்­க­ளுக்கு, 130 கோடி ரூபாய் வரை நஷ்­டம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கூறி, அதன் முக­வர்­கள் சட்­டப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யில் இறங்க
உள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement